கனடாவில் மாயமாகி கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் காணாமல் போன டீன் ஏஜ் சிறுமி!
கனடாவில் காணாமல் போன 14 வயது டீன் ஏஜ் சிறுமி தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பொலிசாரே இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
Trisha Stinis என்ற 15 வயது சிறுமி Scarboroughல் உள்ள கிளிப்கிரஸ்ட் பகுதியில் கடந்த 8ஆம் திகதி மாயமான நிலையில் அன்றே மீண்டும் காணப்பட்டார். இதன்பின்னர் மாயமான Trisha கடந்த 11ஆம் திகதி பிராம்டனில் காணப்பட்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து அவர் காணவில்லை. Trisha ஐந்தடி மூன்று அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் நடுத்தரமான உடல்வாகு, வெளிர் நிறம், பழுப்பு நிற கண்கள் மற்றும் சுருள், பழுப்பு நிற முடி கொண்டவர் எனவும் காவல்துறையினரால் விவரிக்கப்படுகிறார்.
பொலிசார் Trisha-வின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை கொண்டதோடு கவலையும் அடைந்துள்ளனர்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிசாரை தொடர்பு கொண்டு கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        