2022 -2024ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டம் குறித்து வெளியாகியுள்ள முக்கிய செய்தி
கனடா, அடுத்த மாதம் 11ஆம் திகதி, (2022, பிப்ரவரி 11) அன்று, 2022 -2024ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டத்தை அறிவிக்க உள்ளது.
இது, 2021க்குப் பிறகு அறிவிக்கப்படும் முதல் புலம்பெயர்தல் மட்ட திட்டமாகும். அத்திட்டத்தை அறிவிக்கும்போது, கனடா அரசு முக்கிய மாற்றம் ஒன்றை வெளியிட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் கனடாவுக்கான புலம்பெயர்தல் இலக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அறிவிப்பு மற்றும் பொருளாதார, குடும்ப மற்றும் மனிதநேய புலம்பெயர்தல் திட்டங்களின் கீழ் எத்தனை பேர், பிரிவு ஒன்றின் கீழ் கனடாவுக்கு புதிதாக வரவேற்கப்பட இருக்கிறார்கள், ஆகிய விடயங்கள் அந்த அறிவிப்பில் இடம்பெறும்.
கனடாவின் மைய புலம்பெயர்தல் சட்டமான, புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இந்த அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் 1ஆம் திகதியே வெளியாகியிருக்கவேண்டும்.
ஆனால், 2021இல் கனடா தேர்தலையொட்டி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டதால் அவ்வாறு அந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இம்மாதம் 31ஆம் திகதிதான் மீண்டும் நாடாளுமன்றம் கூட உள்ளது.
ஆகவேதான், இம்முறை இந்த அறிவிப்பு பிப்ரவரி 11 அன்று வெளியாக உள்ளது. ஆகவே, இந்த ஆண்டைப்பொருத்தவரை, இன்னொரு அறிவிப்பு, அதாவது புலம்பெயர்தல் மட்ட திட்டம் குறித்த அடுத்த அறிவிப்பு, அதாவது இரண்டாவது மட்ட திட்டம் குறித்த அறிவிப்பு, இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி வெளியாகலாம் (2023 -2025க்கான புலம்பெயர்தல் மட்ட திட்ட அறிவிப்பு) தற்போதைய புலம்பெயர்தல் மட்ட திட்டத்தின் கீழ் (2021 -2023 திட்டம்), கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, இந்த ஆண்டு (2022), 411,000 புதிய புலம்பெயர்வோரை கனடாவுக்கு வரவேற்க உள்ளது.
அத்திட்டத்தின் கீழ், 241,500 பொருளாதார வகுப்பு புலம்பெயர்வோர், 103,500 குடும்ப பிரிவு புலம்பெயர்வோர் கனடாவுக்கு வரவேற்கப்பட உள்ளார்கள். மீதமுள்ள 66,000 பேர், அகதிகள் மற்றும் மனிதநேய அடிப்படையில் வரவேற்கப்படுவோர் ஆவர்.
பிப்ரவரி 11 அன்று வெளியிடப்படும் முக்கிய மாற்றம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். அதற்கு அதிக நாட்கள் இல்லையே!