செப்டம்பர் 26 முதல்... வெளிநாட்டவர்களுக்கு கனடா பிரதமர் வெளியிட்டுள்ள ஏமாற்றமளிக்கும் செய்தி
கனடா பிரதமர், கனடாவுக்கு வரும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 26 முதல்...
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, அடுத்த மாதம் முதல், கனடாவில் எங்கெங்கு வேலையில்லாத் திண்டாட்ட வீதம் 6 சதவிகிதத்துக்கு அதிகமாக உள்ளதோ, அங்கெல்லாம் வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதிகள் வழங்கப்படாது என்று கூறியுள்ளார்.
பருவகால பழங்கள் பறிக்கும் பணி, கட்டுமானம் மற்றும் சுகாதாரத்துறைக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
நேற்று திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், கனேடிய பணி வழங்குவோர் வேலைக்கு எடுக்க அனுமதிக்கப்படும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை, 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த விதிகள், செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளன.
ஏற்கனவே இந்த ஆண்டின் துவக்கத்தில், கனடாவுக்கு வரும் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்திருந்தது.
இந்த கட்டுப்பாடு, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் சர்வதேச மாணவர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |