கனடாவில் பல்வேறு துறைகளில் பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு: எந்தெந்த துறைகளுக்கு அதிக பணியாளர்கள் தேவை?
கனேடிய அமைப்பு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், கனேடிய வர்த்தக நிறுவனங்களில் 80 சதவிகித நிறுவனங்களிடம், அவை தகுதியான பணியாளர்களை தேர்வு செய்வதற்கு, எப்படி கனடாவின் புலம்பெயர்தலை பயன்படுத்திக்கொள்கின்றன என்று கேட்கப்பட்டது.
Business Council of Canada (BCC) என்ற அந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்ட நிறுவனங்களில் 1.6 மில்லியன் பணியாளர்கள் பணி செய்கிறார்கள். ஆய்வின்போது, தாங்கள் பணியாளர்கள் தேர்வுக்காக பல்வேறு நாடுகளிலிருந்து ஆட்களை தேர்வு செய்வதற்காக புலம்பெயர்தல் அமைப்பை பயன்படுத்திக்கொள்வதாக மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் தெரிவிக்க, மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்களோ, தாங்கள் ஏற்கனவே கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்துவிட்டவர்களை பணிக்காக தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளன.
பணி வழங்குவோரில் பெரும்பாலானோர் அல்லது 50 சதவிகிதத்தினர், ஆண்டுதோறும் நிரந்தர வாழிடம் பெறுவோரின் எண்ணிக்கையை கனடா அதிகரிக்கவேண்டும் என கருதுகிறார்கள். மீதமுள்ள கனேடிய குடிமக்களோ, அரசின் மூன்றாண்டு புலம்பெயர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
கனடாவின் 2022 - 2024ஆம் ஆண்டின் புலம்பெயர்தல் மட்ட திட்டம், ஆண்டுதோறும் 450,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளது.
450,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளது. பணி வழங்குவோர், தங்கள் நிறுவனங்களில் காலியாக இருக்கும் தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதில் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக, கணினி அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பெரும்பாலும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது.
அத்துடன், பிளம்பர்கள், எலக்ட்ரிசியன்கள் மற்றும் கட்டுமானப்
பணியாளர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவது குறிப்பிடத்தக்கது.