பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கனடா திட்டம்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் திட்டம்
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுவருவதாக கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே G7 நாடுகளில் பிரான்சும் பிரித்தானியாவும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் கனடாவும் இணைந்துகொண்டுள்ளது.
என்றாலும், கனடாவின் முடிவு, ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் ஹமாஸ் இல்லாமல் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்துவது போன்ற விடயங்களைப் பொருத்தது என்றும் கார்னி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பிலுள்ள 193 நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |