முறைப்படி ஆவணங்கள் வைத்திருந்தாலும் சில நாட்டவர்களுக்கு கனடாவுக்குள் அனுமதி கிடையாது: பின்னணி
முறைப்படி ஆவணங்கள் வைத்திருந்தாலும் சில நாட்டவர்களுக்கு கனடாவுக்குள் அனுமதி கிடையாது என கனடாவின் பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.
முறைப்படி ஆவணங்கள் வைத்திருந்தாலும்...
ஆம், காங்கோ குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள், முறைப்படி தற்காலிக விசாவோ, நிரந்தர குடியிருப்பு விசாவோ அல்லது மின்னணு பயண அங்கீகாரமோ வைத்திருந்தாலும், அவர்களுக்கு கனடாவுக்குள் நுழைய அனுமதி கிடையாது.
காரணம் என்ன?
அதாவது, எபோலா தொற்று பரவும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாலேயே இந்த தடை என்றும், இது தற்காலிகத் தடைதான் என்றும் கனடாவின் பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.
மே மாதம் 27ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ள இந்த தடை, அடுத்த 90 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மேற்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே கனடாவில் தங்கியிருப்பார்களானால், அவர்களை இந்தத் தடை பாதிக்காது. அவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் வரை கனடாவில் தங்கியிருக்கலாம்.
சர்வதேச அளவில் எபோலா தொற்று பரவிவரும் நிலையில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கனடா அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |