கனடாவில் காணாமல் போன ஜோடி: "சடலத்தைத் தான் தேடுகிறோம்"- புகைப்படத்துடன் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பொலிஸார்
ரொறன்ரோவில் சில தினங்களுக்கு முன்பு காணமால் போன ஜோடி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், சந்தேகநபரை கனடா முழுவதும் வலைவீசி தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள Markham நகரத்த்தை சேர்ந்த தம்பதிகளாக Quoc Tran (37) மற்றும் Kristy Nguyen (25) ஆகிய இருவரும், செப்டம்பர் 18-ஆம் திகதி, ரொறொன்ரோ நகரத்தில் காணமால் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் முன்னதாக வெளியிட்ட தகவலின்படி, இந்த ஜோடி கடைசியாக செப். 18 என்று மாலை 4.30 மணியளவில் Highway 7 East and Warden Avenue பகுதியில் காணப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
Picture: York Regional Police handouts
ஆனால், நேற்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸார் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த ஜோடி கடைசியாக மாலை 5.30 மணியளவில் Vaughan-ல் உள்ள Zenway Boulevard வணிக வளாகத்தில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டைக்கு பிறகு, பொலிஸார் சில திடுக்கிடும் தகவல்களையம் நேற்று வெளியிட்டனர்.
காணாமல் போன இருவரும் அதே நாளில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களின் சடலத்தை தேடி மீட்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கூறினர்.
மேலும், அவர்களை Phuong Tan Nguyen எனும் 35 வயது நபர் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
Phuong Tan Nguyen ஏற்கனவே பல வழக்குகளில் தேடப்படும் ஒரு குற்றவாளி என்றும், அவன் Mike என்ற பெயரில் சுற்றித்திரிவதாகவும், அவர் இந்த தம்பதி காணாமல் போன அன்று, அதே இடத்தில் ஒரு கன்டெயினர் ட்ரக்கை ஓட்டிச் சென்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Picture: York Regional Police handouts
இந்நிலையில், அவனை பிடிக்க கனடா அளவிலான பிடியாணை விடுக்கப்பட்டு மிகத் தீவிரமாக தேடப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
Phuong Tan Nguyen மற்றும் அவர் சம்பவத்தன்று பயன்படுத்திய ட்ரக்கின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவர் 5 அடி 9 அங்குலம் உயரமும், 180 பவுண்ட் எடை கொண்டவராகவும் தெரிவித்தனர்.
அவரையும், சந்தேகிக்கும் படியான ஏதேனும் கண்டெயினர் லொறியையும் பார்த்தால் உடனடியாக அத்தகவல் கொடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.