இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம்: கனேடிய அரசு எச்சரிக்கை

Canada Mexico
By Ragavan Jan 28, 2025 02:18 PM GMT
Report

நான்கு கரீபியன் நாடுகள் மற்றும் மெக்சிகோவிற்கு கனேடிய அரசு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

கனடா அரசு கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இவை அதிகப்படியான குற்றச்செயல்கள், வன்முறைகள் மற்றும் அடிப்படை தேவைகளின் பற்றாக்குறை காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

Canada travel warning, Canada issues travel warnings for 5 Caribbean destinations and Mexico

கியூபா

கியூபாவில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு மற்றும் அடிப்படை தேவைகளின் குறைபாடுகள் காரணமாக கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

டொமினிகன் குடியரசு

இங்கு பல்வேறு குற்றங்கள், குறிப்பாக செல்வச்சின்னங்கள் அல்லது விலைமதிப்புள்ள பொருட்களை வெளிப்படையாக காட்சிப்படுத்துவதால் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக உள்ளன.

குறிப்பாக சுற்றுலா பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வன்முறை குற்றங்கள் தீவிரமாக நடைபெறுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் திரும்பப்பெறப்படும் Coca-Cola பானங்கள்., பிரித்தானியாவிலும் சோதனை

ஐரோப்பிய நாடுகளில் திரும்பப்பெறப்படும் Coca-Cola பானங்கள்., பிரித்தானியாவிலும் சோதனை

ஜமைக்கா

ஜமைக்காவில் வன்முறை குற்றச்செயல்கள் அதிகமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 

சில பகுதிகளில் அரசால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிக உரிமைகளுடன் செயல்படுகின்றனர்.

பஹாமாஸ்

பஹாமாஸ் தீவுகளின் சில பகுதிகளில் கொள்ளை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகமாக உள்ளன. சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் தனியாக செல்லாமல், பாதுகாப்பான சுற்றுலா பகுதிகளில் மட்டுமே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

பிரித்தானியாவில் 2,000 வங்கிகள் மூடல்., வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் 2,000 வங்கிகள் மூடல்., வெளியான அதிர்ச்சித் தகவல்

மெக்சிகோ

மெக்சிகோவில் கடத்தல்கள் மற்றும் வன்முறை அதிகமாக உள்ளதால் கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய சாலைகளில் ஆயுதக் குழுக்கள் வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாடுகளுக்கான பயண திட்டங்களை கவனமாக மதிப்பீடு செய்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுமாறு கனடா அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

தினசரி பயன்பாட்டிற்கு அதிக Range வழங்கும் டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

தினசரி பயன்பாட்டிற்கு அதிக Range வழங்கும் டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

Canada travel warning, Canada issues travel warnings for 5 Caribbean destinations and Mexico

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US