கனடாவில் பயணத் தடை நீக்கம்! மீண்டும் சோதனை விதிமுறை அமுல்
பத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குவதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் சோதனை விதிமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Omicron தொற்று காரணமாக தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ, ஈஸ்வதினி, நமீபியா, நைஜீரியா, மலாவி மற்றும் எகிப்து ஆகிய 10 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பட்டை, உள்ளூர் நேரப்படி நாளை (சனிக்கிழமை) இரவு 11:59 மணிக்கு முடிவடையும் (0459 GMT ஞாயிறு) என்று கனடாவின் சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் (Jean-Yves Duclos) தெரிவித்தார்.
கடந்த மாதம் கனடாவில் Omicron பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், எங்களுக்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்வதற்கும்" இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதனை மீறியும் Omicron இப்போது கனடாவிற்குள் பரவி வருவதால், இனி இந்த பயண விதிமுறைகள் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிசம்பர் 21-ஆம் திகதி முதல் கனடாவில், அனைத்து பயணிகளுக்கும் வரும் முன் எதிர்மறையான PCR சோதனைகள் மீண்டும் கட்டாயமாக்கப்படும் என்று Duclos கூறினார்.
முன்னதாக, இந்த வார தொடக்கத்தில், அரசாங்கம் 'இது இப்போது பயணிக்க வேண்டிய நேரமே இல்லை" என்று எச்சரித்தது.
கனடா முழுவதும் வெள்ளிக்கிழமை வரை கிட்டத்தட்ட 350 பேர் Omicron வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வக சோதனைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மொத்த சராசரி தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த வாரத்தில் 45 சதவீதம் அதிகரித்து சுமார் 5,000-ஆக உள்ளது.