ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் ஒரு அடி: அடுத்த தொகுதியையும் இழந்தது ட்ரூடோ கட்சி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் ஒரு அடி விழுந்துள்ளது. ஆம், இடைத்தேர்தலில், முக்கியமான மற்றொரு தொகுதியையும் இழந்துள்ளது அவர் சார்ந்த லிபரல் கட்சி.
அடுத்தடுத்து இரண்டு தோல்விகள்
கனடாவின் Toronto-St. Paul's தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது அனைவரும் அறிந்ததே.
கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.
Don Stewartஇன் வெற்றி, லிபரல் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. காரணம், 30 ஆண்டுகளாக அத்தொகுதி லிபரல் வசம் இருந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினர் Toronto-St. Paul's தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்கள்.
மீண்டும் ஒரு தோல்வி
இந்நிலையில், மொன்றியலிலுள்ள, LaSalle-Émard-Verdun தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.
அடுத்தடுத்து ட்ரூடோ கட்சி சந்தித்துவரும் தோல்விகள், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே ட்ரூடோவின் சோந்தக் கட்சியிலேயே அவர் கட்சித் தலைமையிலிருந்து விலகவேண்டும் என எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், மீண்டும் ஒரு இடைத்தேர்தலில் அவரது கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளதால் அவர் பதவி விலகவேண்டும் என அழுத்தம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |