கனடாவில் ட்ரூடோ அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: தற்காலிகமாக தலை தப்பியது
கனடாவில், ஆளும் ட்ரூடோ அரசு மீது நேற்று மதியம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
என்றாலும், இரண்டு முக்கிய கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்காததால் ட்ரூடோவின் தலை தப்பியுள்ளது.
ட்ரூடோ அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
கனடாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவருகிறது. ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு உருவாகிவருகிறது.
ட்ரூடோவின் கட்சியைச் சேர்ந்தவர்களே அவர் தலைமைப் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என குரல் கொடுத்துவருகிறார்கள்.
Reuters
இந்நிலையில், கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, நேற்று ட்ரூடோ அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது.
தற்காலிகமாக தலை தப்பியது
நேற்று மதியம், ட்ரூடோ அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆனால், New Democratic Party (NDP) மற்றும் the Bloc Québécois என்னும் இரண்டு கட்சிகளும், கன்சர்வேட்டிவ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவில்லை.
ஆகவே, ட்ரூடோ அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
ட்ரூடோவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 153 பேரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
கன்சர்வேட்டிவ் கட்சி வசமோ 119 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர்.
New Democratic Party (NDP) மற்றும் the Bloc Québécois என்னும் இரண்டு கட்சிகளும் ட்ரூடோவுக்கு ஆதரவாகவே வாக்களிக்க, நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக 211 வாக்குகள் கிடைத்தததால், தீர்மானம் தோல்வியடைந்தது.
விடயம் என்னவென்றால், ட்ரூடோவுக்கு இது தற்காலிக வெற்றிதான். காரணம், மீண்டும் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர கன்சர்வேட்டிவ் கட்சி திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |