இந்தியா உடன் உறவை வலுப்படுத்தவே கனடா விரும்புகிறது: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தவே கனடா முயற்சித்து வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியா கனடா உறவில் விரிசல்
கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்கு சம்பந்தம் இருப்பதாக கனடா அரசு சமீபத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியது.
இதற்கு இந்தியாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதுடன், இருநாடுகளும் அவர்களது தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது மற்றும் விசா கட்டுப்பாடுகளை விதித்தது.
மேலும் சமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஆண்டனி பிளிங்கன் இருவரும் சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து விவாதித்தார்கள்.
உறவை வலுப்படுத்தவே கனடா முயற்சி
இந்நிலையில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தவே கனடா முயற்சித்து வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மான்ரியல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது, அத்துடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
எனவே இந்தியாவுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளவே தன்னுடைய அரசு விரும்புகிறது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அதே சமயம் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உண்மையை வெளிக் கொண்டு வர இந்தியா ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |