நிலநடுக்கம், காட்டுத்தீ போன்ற பேரிடர்களுக்கு தயாராக இல்லாத கனடா - எச்சரிக்கை
கனடா, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் பின்தங்கியுள்ளதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
யூகோன் பிராந்தியத்தில் உள்ள ‘Tintina Fault’ எனப்படும் பிளவு கோடு, 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படும் அறிகுறிகளை காட்டுகிறது.
இது பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ மற்றும் புகை மாசு
2023-ஆம் ஆண்டில் கனடா வரலாற்றிலேயே அதிகமான காட்டுத்தீ பாதிப்பை சந்தித்தது. இதனால், ஒட்டாவா, ரொறன்ரோ, மான்ட்ரியல் போன்ற நகரங்களில் காற்றுத் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த கோடையில், புகைமூட்டம் காரணமாக வெளிப்புற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன, பலரின் நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது.

மக்களின் தயார்நிலை குறைவு
ஒரு ஆய்வில், கனடாவில் உள்ள வீடுகளில் 25 சதவீத குடும்பங்கள் மட்டுமே வானிலை சார்ந்த அவசர நிலைக்கு முன்னெச்சரிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்தது. பெரும்பாலானோர், பேரிடர் தயார்நிலையை அரசு அல்லது மீட்பு படையினரின் பொறுப்பாகவே கருதுகின்றனர்.
அமைப்புகளின் பின்தங்கல்
நகரங்கள் பழைய வெள்ள அபாய வரைபடங்களைப் பயன்படுத்துகின்றன.
பள்ளிகள் காற்றோட்டம், காற்றுத் தரம் மேம்படுத்தும் அடிப்படை மாற்றங்களை புறக்கணிக்கின்றன.
போக்குவரத்து அமைப்புகள் பழைய உள்கட்டமைப்பில் இயங்குகின்றன.
சைபர் பாதுகாப்பு அமைப்புகள், நீர், மின்சாரம் போன்ற முக்கிய கட்டுப்பாட்டு அமைப்புகள் மீது வெளிநாட்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் ப்ரோடி ராமின் (Brodie Ramin), “பேரிடர்கள் திடீரென நிகழ்வதில்லை, அவை பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கைகளின் விளைவுகள். கனடா, தடுப்பு மனப்பாங்கு (Prevention Mindset) கொண்டு செயல்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada disaster preparedness report 2025, Earthquake risk Tintina Fault Yukon Canada, Canada wildfire smoke health impact 2023, Canadian emergency management failures, Brodie Ramin prevention mindset disasters, Canada flood maps outdated emergency plans, Canadian schools air quality disaster risk, Cybersecurity threats Canada infrastructure, Ottawa Toronto Montreal wildfire smoke crisis, Canada ill prepared natural disasters analysis