கனேடிய மாகாணமொன்றில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
கனேடிய மாகாணமொன்றின் மக்களுக்கு மருத்துவர்களும் வைரஸ் துறை நிபுணர்களும் தட்டம்மை தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் உருவாகியுள்ள அச்சம்
ஜனவரி மாதம் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை, கனடாவின் மனித்தோபா மாகாணத்திலுள்ள பிராண்டன் நகரில் விவசாயம் தொடர்பிலான கண்காட்சி ஒன்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள்.

மனித்தோபா மாகாணத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 74 பேருக்கு தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தட்டம்மையால் பாதிக்கப்பட்ட சிலர் தங்களுக்கு பாதிப்பு இருப்பது தெரியாமலே பிராண்டன் நகரில் நடைபெற்ற அந்த விவசாய கண்காட்சியில் கலந்துகொண்டிருக்கலாம் என கருதப்படுவதால், அவர்களைக் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
தட்டம்மை தொடர்பில் ஒரு எச்சரிக்கை
அந்த நிகழ்ச்சி கவலையை உருவாக்கியுள்ளதைத் தொடர்ந்து, மருத்துவர்களும் வைரஸ் துறை நிபுணர்களும் தட்டம்மை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
அதாவது, தட்டம்மைத் தொற்று பரவல் அடங்கும் வரை, தட்டம்மைக்கான தடுப்பூசி பெறாதவர்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லவேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மூடியிருக்கும் அறை ஒன்றிற்குள் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நுழைவாரானால், எளிதில் பாதிக்கப்படும் அபாயம் கொண்ட, குழந்தைகள், தடுப்பூசி பெறாதவர்கள் போன்றவர்களில் 90 சதவிகிதம் பேர் தட்டம்மைத் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
விடயம் என்னவென்றால், தட்டம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய உடலில் ஒரு வாரத்துக்குப் பிறகே அறிகுறிகள் தோன்ற வாய்ப்புள்ளது.
ஆக, தங்களுக்கு தட்டம்மைத் தொற்று இருப்பது தெரியாமலே அவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதால், எளிதில் பாதிக்கப்படும் அபாயம் கொண்ட, குழந்தைகள், தடுப்பூசி பெறாதவர்கள் போன்றவர்களுக்கு தட்டம்மைத் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |