கனடாவின் பழிவாங்கல்... வேலை வாய்ப்புகளுடன் பல பில்லியன் டொலர்களை இழக்கும் அமெரிக்கா
கனடாவின் பழிவாங்கல் புறக்கணிப்பால் அமெரிக்கா சுமார் 4 பில்லியன் டொலர் வருவாய் மற்றும் 28,000 வேலை வாய்ப்பையும் இழக்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனேடிய மக்கள்
கனடாவில் இருந்து அமெரிக்க எல்லையைக் கடப்பதை தடுத்து நிறுத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் சபதமிட, பதிலளித்த கனேடிய மக்கள், தங்கள் பணத்தை அமெரிக்காவில் செலவிடுவதை கைவிட்டனர்.
கனடாவை இன்னொரு மாகாணமாக அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுக்க, அமெரிக்காவுக்கு பயணப்படுவதையே கனேடிய மக்கள் நிறுத்திக் கொண்டனர்.
அத்துடன் அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்புக்கும் உரிய பதிலளித்துள்ளனர். மார்ச் மாதத்தில் மட்டும் காரில் அமெரிக்காவிற்கு பயணப்படும் கனேடிய மக்களின் எண்ணிக்கை 32 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதற்கு முந்தைய மாதம் 23 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிவு பதிவாகியுள்ளது. அத்துடன் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கான விமான பயணங்களும் 13.5 சதவீதம் சரிவடைந்துள்ளது.
கனடாவின் எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்களை குறிவைத்து வரி விதிக்க, கனேடிய மக்கள், கனடாவின் தயாரிப்புகளை மட்டுமே வாங்கும் முடிவுக்கு வந்தனர். பொதுவாக அமெரிக்காவுக்கு அதிகமாக பயணப்படும் சர்வதேச பயணிகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று.
புறக்கணிக்க வேண்டாம்
கடந்த ஆண்டு மட்டும் 20.5 பில்லியன் டொலர் தொகையை அமெரிக்காவில் செலவிட்டுள்ளனர். இதில் 10 சதவீதம் சரிவடைந்தால் கூட 2 பில்லியன் டொலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதுடன், 14,000 வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்படும்.
கார் மற்றும் விமான பயணங்கள் சரிவடைந்துள்ளதால் ஏற்படும் தாக்கம் என்பது 4 பில்லியன் டொலர் வருவாய் இழப்புக்கு காரணமாகும் என்றும் கூறுகின்றனர். அமெரிக்காவில் பொதுவாக கனேடிய மக்களால் அதிகம் பார்வையிடும் பகுதிகளான நியூயார்க்கின் பஃபலோ மற்றும் மைனேயில் உள்ள பழைய ஆர்ச்சர்ட் கடற்கரை போன்றவை கடுமையாக பாதிக்கப்படும்.
மட்டுமின்றி, கலிபோர்னியாவில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ் போன்ற பகுதிகளில் கனேடிய மக்கள் புறக்கணிக்க வேண்டாம் என கெஞ்சும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
ஆண்டுக்கு 300,000 கனேடியர்கள் பாம் ஸ்பிரிங்ஸ் பகுதிக்கு சுற்றுலா செல்வதுடன், பல மாதங்கள் தங்கியிருப்பார்கள் என்றே கூறப்படுகிறது. ஆனால் தற்போது கனேடிய சுற்றுலா பயணிகள் மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகளுக்கு அதிகமாக சுற்றுலா செல்ல துவங்கியுள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |