ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுப்போம்! பிரபல நாட்டிற்கு ஆதரவாக கனடா சூளுரை
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவோம் என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly உறுதியளித்துள்ளார்.
ரஷ்யா 1,00,000 க்கும் மேற்பட்ட படைகளை உக்ரைனுடனான எல்லைக்கு அருகில் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், உக்ரேனிய இறையாண்மைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்வதற்காக கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி அடுத்த வாரம் உக்ரைன் தலைநகர் Kyiv-க்கு செல்லவுள்ளார்.
இதுதொடர்பாக Melanie Joly வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய படைகள் மற்றும் ஆயுதங்களை உக்ரைன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவிப்பது முழு பிராந்தியத்தின் பாதுகாப்பையும் பாதிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.
விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்த கனடா அதன் சர்வதேச நாட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு செல்லும் Melanie Joly, அந்நாட்டு பிரதமைர் Denys Shmygal சந்திக்க உள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் இருக்கும் 200 பேர் கொண்ட கனடியப் பயிற்சிப் குழுவிடம் உரையாடுவதற்காக நாட்டின் மேற்குப் பகுதிக்குச் செல்லவுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தனது ஒரு வாரப் பயணத்தின் போது Joly, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை பிரஸ்ஸல்ஸில் சந்திப்பார்.