இனி இது எளிதல்ல... தமிழ் உட்பட 11 மொழிகளில் எச்சரிக்கை விடுத்த கனடா அரசாங்கம்
புலம்பெயர் மக்கள் மற்றும் ஏதிலிகளை அதிகமாக வெரவேற்றுள்ள நாடுகளில் ஒன்றான கனடா, தற்போது தமிழ் உட்பட 11 மொழிகளில் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதன்மையான காரணம்
கனடாவில் இனி புகலிடக் கோரிக்கை என்பது எளிதல்ல என்றே கனடா அரசாங்கம் விளம்பரம் செய்துள்ளது. சுமார் 178,662 அமெரிக்க டொலர் செலவிட்டு தமிழ், இந்தி, உருது, ஸ்பானிஷ் உட்பட 11 மொழிகளில் எச்சரிக்கை விளம்பரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்களிடையே செல்வாக்கு சரிந்துவரும் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தின் அரசியல் தந்திரம் இதுவென்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். கனடாவில் குடியிருப்பு விலை அதிகரிக்க முதன்மையான காரணம் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே என குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
ஆனால் அது வெறும் எளிமையான விளக்கம் என்றே நிபுணர்கள் தரப்பின் வாதமாக உள்ளது. இருப்பினும், கனடாவில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய மக்களே கருதும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது நான்கு மாத விளம்பரத்திற்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் இதேபோன்ற விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்ட மொத்த செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவிட உள்ளனர்.
மட்டுமின்றி, கனடாவில் புலம்பெயர்வது எப்பட்டி அல்லது கனடா ஏதிலிகள் உள்ளிட்ட தேடும் வாக்கியங்களை இனி விளம்பரதாரர் பகுதி என்றும் குறிப்பிடப்படும். கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்றில்,
கனடாவில் இனி புகலிடம் கோருவது எளிதல்ல. தகுதி பெற கடுமையான வழிமுறைகள் உள்ளன. முடிவெடுக்கும் முன்னர் அவை குறித்து நன்கு தெரிந்துகொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக புலம்பெயர் மக்களை இருகரம் நீட்டி வரவேற்று வந்துள்ள கனடா, தற்போது அந்த எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன், டொனால்டு ட்ரம்ப் காரணமாக அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு தற்காலிகமாக குடியேறும் மக்களையும் தடுத்து வருகிறது.
கனடியர்கள் உங்களை வரவேற்பார்கள்
கனடாவில் புகலிடக் கோரியுள்ள 260,000 பேர்களின் விண்ணப்பம் தற்போதும் பரிசீலனையில் உள்ளது. மேலும், விசா காலாவதியாகும் போது மில்லியன் கணக்கான மக்கள் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று அரசாங்கம் நம்புகிறது.
அவ்வாறு வெளியேற மறுக்கும் மக்களை நாடு கடத்துவதாக குடிவரவு அமைச்சர் மிரட்டியுள்ளார். கடந்த 2017ல் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த போது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ,
துன்புறுத்தல், பயங்கரவாதம் மற்றும் போரில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு, உங்கள் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் கனடியர்கள் உங்களை வரவேற்பார்கள். பன்முகத்தன்மையே எங்கள் பலம் கனடா உங்களை வரவேற்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 17ம் திகதி ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள காணொளியில் நேரெதிரான கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது புலம்பெயர் மக்களை இனி கனடா ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றே ட்ரூடோ தமது காணொளியில் சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |