எக்ஸ் பாலின குறியீடு கொண்டவர்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை
எக்ஸ் (X) பாலின குறியீடு கொண்ட பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு கனடா அரசு எச்சரித்துள்ளது.
கனடா அரசு, X பாலின குறியீடு கொண்ட பாஸ்போர்ட் வைத்துள்ள குடிமக்களுக்கு அமெரிக்கா நுழைவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
X குறியீடு என்பது தன்னிச்சையான பாலின அடையாளம் கொண்டவர்கள், transgender மற்றும் nonbinary பயன்படுத்தும் ஒரு வகையாகும்.
Global Affairs Canada வெளியிட்ட பயண அறிவுறுத்தலில், "கனடா X பாலின குறியீடு கொண்ட பாஸ்போர்ட்களை வழங்கினாலும், மற்ற நாடுகள் அதனை ஏற்கும் உறுதியில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஜனவரி 2025-ல் பதவியேற்ற பிறகு, "இரண்டு பாலினங்கள் மட்டும் உள்ளன- ஒன்று ஆண் இன்னொன்று பெண்" என தனது உரையில் கூறியதுடன், transgender மற்றும் nonbinary மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை, 'X' குறியீடு கொண்ட பாஸ்போர்ட்கள் வழங்குவதை நிறுத்தும் உத்தரவை பிறப்பித்தது. ஆனால், நீதிமன்ற தடை காரணமாக அந்த உத்தரவு நடைமுறைக்கு வரவில்லை.
சமீபத்தில், அமெரிக்க மேல் நீதிமன்றத்தில் அந்த தடையை நீக்க ட்ரம்ப் நிர்வாகம் முயன்றது, ஆனால் மறுக்கப்பட்டது.
2019 முதல் 2024 வரை, கனடா சுமார் 3,400 X பாலின குறியீடு கொண்ட பாஸ்போர்ட்களை வழங்கியுள்ளது.
இந்த புதிய எச்சரிக்கை, LGBTQIA+ சமூகத்தினருக்கான சர்வதேச பயண சுதந்திரம் குறைவடையும் அபாயத்தை வெளிப்படுத்துகிறது. இது, பாலின அடையாளங்களை ஏற்கும் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை உருவாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |