கனடாவில் இந்திய வம்சாவளிப்பெண் கொலை: பிடியாணை பிறப்பிப்பு
கனடாவில் இந்திய வம்சாவளியினரான பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில், அவரது காதலர் என கருதப்படும் ஒருவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பெண்
கனடாவின் ரொரன்றோ நகரில் வாழ்ந்துவந்த ஹிமான்ஷி குரானா (30) என்னும் பெண், கடந்த வெள்ளிக்கிழமை இரவு காணாமல்போனதாக பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் அவரைத் தீவிரமாக தேடிவந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் வீடொன்றில் ஹிமான்ஷி உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹிமான்ஷியைக் கொலை செய்ததாக அவரது காதலர் என கருதப்படும் அப்துல் கஃபூரி (32) என்னும் இளைஞர் மீது கனடா முழுமைக்குமான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்துல் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஜாமீனில் வெளிவர இயலாத வகையிலான ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
அப்துலுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், அவர் எங்கே இருக்கிறார் என யாருக்காவது தெரியுமானால், உடனடியாக தங்களுக்கு தகவல் கொடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |