ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயார்! கனடா முக்கிய அறிவிப்பு
ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க கனடா தயார் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லைக்கு அருகே ரஷ்ய அதன் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்ய கடும் விளைவுகளை சந்திக்கும் என மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை எச்சரித்துள்ளன.
இந்நிலையில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg-ஐ சந்தித்த அனிதா ஆனந்த், உக்ரைன் மற்றும் நேட்டோ கூட்டணிக்கு ஆதரவளிக்க கனடா தயாராக இருப்பதாகக் கூறினார்.
மேலும், உக்ரைனில் அதன் பயிற்சி நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான கனடா அரசாங்கத்தின் திட்டங்களை அனிதா மீண்டும் வலியுறுத்தினார்.
உக்ரைன் மீது படையெடுத்தால், மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க கனடா தயாராக இருக்கிறது என அவர் கூறினார்.
ரஷ்யாவுக்கு இரண்டே வழிகள் தான் இருக்கிறது, ஒன்று படைகளை பின்வாங்கி பதட்டத்தை தணிக்க வேண்டும் அல்லது கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என அனிதா தெரிவித்துள்ளார்.