கனடாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து 2 பேர் கொலை
கனடாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு
கனேடிய தலைநகர் ஒட்டாவாவின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இன்பினிட்டி கன்வென்ஷன் மையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குள் திடீரென நுழைந்த மர்ம கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் திருமண நிகழ்ச்சிக்காக கூடியிருந்தவர்கள் நாலாபுறமும் தெறித்து ஓடினார்கள்.
இருப்பினும் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குண்டு பாய்ந்து டொரண்டோவை சேர்ந்த 26 வயதுடைய சையத் மொஹமது அலி மற்றும் 36 வயதுடைய அப்திஷாகுர் அப்தி தாஹிர் என இரண்டு கொல்லப்பட்டனர்.
பொலிஸார் விசாரணை
மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்த பொலிஸார் காயமடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் துப்பாக்கி சூட்டிற்கான பின்னணி காரணம் குறித்தும், இந்த துப்பாக்கி சுடு சம்பவம் இனப்பிரச்சனைகளால் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றி தொடர்ந்து பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |