துப்பாக்கியுடன் சுற்றித்திரியும் பெண் கொலையாளி! கனடா அளவில் கைது வாரண்ட் பிறப்பிப்பு.. பொதுமக்கள் எச்சரிக்கை!
கனடாவில் கொலை செய்துவிட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரியும் பெண்னின் புகைப்படம் மற்றும் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கனடாவின் வின்னிபெக் நகரத்தில், Young Street-ல் உள்ள 500-வது பிளாக்கில், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் திகதி, 45 வயது Deena Anne Markwick எனும் பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். அனால் அவர் சிகிச்சை பழநின்றி அன்றே உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த இப்பெண்ணை Laura Fay Buboire எனும் 30 வயது பெண் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்தது.
Laura Fay Buboire ஏற்கெனவே பல வழக்குகளில் தேடப்பட்டுவரும் குற்றவாளி என்பது தெரிவந்தது. தலைமறைவாக பொலிஸிடமிருந்து தப்பிவரும் அவர், கையில் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் மீது கனடா அளவிலான பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரது புகைப்படம் மற்றும் அடையாளங்களை வெளியிட்டுள்ள வின்னிபெக் பொலிஸார், பொது மக்களின் உதவியை உதவியை கோரியுள்ளனர்.
Buboire தோராயமாக 5.4 அடி உயரம் இருக்கலாம், எடை 134 பவுண்டு, பச்சை நிற கண்கள் மற்றும் சிகப்பு அல்லது பிரவுன் நிற தலைமுடி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இவரைப் பார்த்தாலோ, இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ உடனடியாக தகவல் அளிக்குமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.