கனடாவில் ஏற்பட்ட பயங்கரமான காட்டுத் தீ: ஆயிரம் ஹெக்டர் வனப்பகுதி எரிந்து சேதம்
மேற்கு கனடாவில் ஏற்பட்ட பயங்கரமான காட்டு தீயால் ஆயிரம் ஹெக்டர் வனப்பகுதி எரிந்து நாசமடைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பற்றி எரிந்த காடு
கனடா நாட்டின் ஆல்பர்ட்டா பகுதியில் பயங்கரமான காட்டு தீ ஏற்பட்டதில், பல அடி உயரத்திற்கு புகை மண்டலம் கிளம்பியுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த காட்டுத் தீயினால் சுமார் 1458 ஹெக்டர் பரப்பளவுக்கு காடு எரிந்து சாம்பலாகியுள்ளது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
@getty
அதிகரித்த வெப்பம்
காட்டு தீ அதிகரித்ததன் காரணமாக மேற்கு கனடாவில் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. மேலும் இந்த வெப்பத்தால் ஆறுகள் சிற்றோடைகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
@source from alberta
புவி வெப்பமயமாதல் காரணமாக பனி உருகுவதால் கொலம்பியா உட்புற பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கொலம்பியாவின் ஆறுகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்களுக்கு கனடாவின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
@canadian press
மேலும் காட்டு தீயின் காரணமாக அப்பகுதியிலிருந்த `13 ஆயிரம் பேர், அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.