கனடாவில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ: 100 குடும்பங்களுக்கு மேல் வெளியேற்றம்
கனடாவின் வடகிழக்கு பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால், அப்பகுதியிலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பற்றி எரியும் காட்டுத் தீ
கனடாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள காடுகள் அதிக வெப்பத்தின் காரணமாக தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சரியாக 3 மணி அளவில் பற்றிய் காட்டு தீ ராட்சச புகை மூட்டங்களை உருவாக்கி தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.
Unseasonably hot & dry conditions in the North Peace region continue to challenge initial response efforts. A #BCWildfire IMT is helping to relieve pressure from the local fire zone, allowing them to focus on new fire starts. Learn more in this video: https://t.co/AjN8MgBeib pic.twitter.com/Lau1HpmFiK
— BC Wildfire Service (@BCGovFireInfo) May 14, 2023
இதனை தொடர்ந்து செயின் ஜான் கோட்டையை சுற்றியுள்ள மக்களை, தங்களது வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அரசு எச்சரிக்கை விடுத்தது. இதன் அடிப்படையில் அங்குள்ள 136 வீடுகளிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
காட்டுத் தீ சுமார் 12.31 சதுர அடி கிலோ மீட்டர் தூரத்திற்கு, பற்றி எரிவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
போராடும் தீயணைப்பு படையினர்
இந்நிலையில் இந்த காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த செவ்வாய் வரை அப்பகுதியில் பகல் நேர வெப்ப நிலை 10 செல்சியஸ் முதல் 15 செல்சியஸ் வரை இருந்ததாக, கனடாவின் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
It’s been a busy and long night for the crew assisting our friends @SasamatFire with a forest fire. pic.twitter.com/VKOsgmHy67
— RCM-SAR 02 North Van (@RCMSAR02) May 14, 2023
மேலும் அதிக வெப்பநிலை காரணமாக, புவி வெப்பமடைவதால் பனி உருகி வருவதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜீலை மாதங்களில் உண்டாக கூடிய சூழல் தற்போது மே மாசத்திலே துவங்கியிருப்பதாக தீயணைப்பு படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
@B.C. Wildfire Service
இதனால் வடக்கு பீஸ் மாகாணத்தில் கடும் வெப்ப நிலை அதிகரித்து வருவதால், தீயணைப்பு படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் நீரை இறைத்து தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.