கனடா காட்டுத் தீ: ஒரே ஆண்டில் கிரொயேஷியா அளவிக்ரு ஏற்பட்ட அழிவுகள்
கனடாவில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 13.6 மில்லியன் ஏக்கர் (5.5 மில்லியன் ஹெக்டேர்) நிலத்தை காட்டுத் தீக்கள் சுட்டெரித்துள்ளன.
இது கிரொயேஷியா நாடுளவு பரப்பளவுக்கு சமமாகும் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில்:
2023 – வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீ பருவம். 42.9 மில்லியன் ஏக்கர் நிலம் அழிந்தது.
2025 – இதுவரை 3,000 காட்டுத் தீக்கள் பதிவு. 561 தீக்கள் இன்னும் எரிகின்றன.
"2023ல் காட்டுத் தீ தளராத அளவுக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த ஆண்டு தீ பரவல் ஒரு இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதை பார்க்கிறோம்." என கனடாவின் இயற்கை வள அமைச்சகத்தின் அதிகாரி Michael Norton கூறியுள்ளார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கம்
மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் காட்டுத் தீ பரவலுக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
- வெப்பநிலை அதிகரிப்பு
- சிறிதளவு பனி
- சீக்கிரம் வரும் கோடை பருவம்
இவை அனைத்தும் தீ பரவலுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குகின்றன.
அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்:
மனிடோபா, சாஸ்கச்செவான் மாநிலங்கள் – கடுமையான வறண்ட சூழ்நிலையால் அதிக தீ பரவல்.
பிரிட்டிஷ் கொலம்பியா – ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தீவிர எச்சரிக்கை நிலை.
First Nations மக்கள் – இதுவரை 39,000 பேர் இடம்பெயர்த்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada wildfires 2025 update, Canada forest fires acreage, Wildfire damage in Canada, Canada fire season 2025, Croatia-sized wildfire Canada, First Nations wildfire displacement, Canadian climate change impact, Canada wildfires July 2025, BC wildfire alert Canada, Global warming and wildfires Canada