கியூபா, தென் கொரியா அளவுக்கு நிலப்பரப்பு கனடாவில் தீக்கிரை: பலியான இன்னொரு தீயணைப்பு வீரர்
கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பணியாற்றிய தீயணைப்பு வீரர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை மூவர் பலி
குறித்த தகவலை சனிக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர் உறுதி செய்துள்ளார். இந்த ஆண்டு காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களில், இதுவரை மூவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
@ap
முதல்வர் டேவிட் எபி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில், மற்றொரு தீயணைப்பு வீரரை நாம் இழந்துவிட்டோம் என்பதை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த ஹீரோவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்காக எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதத்தில் மட்டும் மேலும் இரு தீயணைப்பு வீரர்கள் பலியாகியுள்ளனர். அத்துடன், கடந்த 19ம் திகதி ஹெலிகொப்டர் விமானி ஒருவரும் தீயணைப்பு வேலைகளில் நடுவே பலியாகியுள்ளார்.
மொத்தம் 990 இடங்களில்
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 30 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளது. அதாவது கியூபா மற்றும் தென் கொரியா நிலப்பரப்புக்கும் அதிகமான பகுதி கனடாவில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
Credit: Bloomberg
பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் 368 இடங்களில் காட்டுத்தீ வியாபித்துள்ளது. கனடாவில் மொத்தம் 990 இடங்களில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 613 இடங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீயின் உக்கிரம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |