கனடாவில் திருட்டில் ஈடுபட்ட நடுத்தர வயது பெண் கைது! வெளியான பின்னணி
கனடாவில் வாகனத்தை திருடிய சம்பவத்தில் பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதான பெண்
Chatham-Kent பொலிசார் தான் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி கடந்த சனிக்கிழமை கிங் தெரு மேற்கில் வாகனம் ஒன்று திருடப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய பொலிசார் ரொறன்ரோவை சேர்ந்த 40 வயதான பெண்ணை கைது செய்ததோடு, அவர் திருடிய வாகனத்தையும் கைப்பற்றினார்கள்.
chathamvoice
வழக்குப்பதிவு
கைதான பெண் மீது மோட்டார் வாகனத்தை திருடியது, மோட்டார் வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்குதல், உத்தரவுக்கு இணங்கத் தவறியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.