கனடாவில் எரிக்கப்பட்ட நிலையில் வீட்டில் கிடந்த பெண்ணின் சடலம்! சிக்கிய கணவர்
கனடாவில் எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Saint-Agathe-des-Monts நகரில் தான் இந்த சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. அன்றைய தினம் மாலையில் பொலிசாருக்கு வந்த தகவலையடுத்து வீடு ஒன்றுக்கு சென்றனர்.
அங்கு ஒரு தம்பதி வசித்து வந்தது தெரியவந்தது, இதையடுத்து இடிபாடுகள் நிறைந்த இடத்தில் Louise Avon என்ற 64 வயது பெண்ணின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
உடலானது எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக Louiseன் கணவர் Pascal Arseneault-ஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Pascal மீண்டும் வரும் 8ஆம் திகதி ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தெரியவந்துள்ளது.