கனடாவில் கடந்த மாதம் காணாமல் போன 24 வயது இளம்பெண்! பொலிசார் வெளியிட்ட தகவல்
கனடாவில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான தகவலை ஹாலிபக்ஸ் பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதன்படி மார்லே அலிசியா மோரிஸ் என்ற 24 வயதான இளம்பெண் கடந்த மாதம் 18ஆம் திகதி காணாமல் போனார்.
அவர் கடைசியாக ஹாலிபக்ஸின் downtown Dartmouth பகுதியில் காணப்பட்டார். இதன்பின்னர் அலிசியா மோரிஸ் காணாமல் போயிருக்கிறார்.
இந்த நிலையில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அலிசியா மோரிஸ் எந்த சூழலில் காணாமல் போனார் மற்றும் அது தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.