கனடாவில் தன்னை ஆண் போல காட்டி கொண்டு பல பெண்களை வலையில் வீழ்த்தி பணத்தை குவித்த மோசடி பெண்! எச்சரிக்கை செய்தி
கனடாவில் தன்னை ஆண் போல காட்டி கொண்டு இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரொறன்ரோவை சேர்ந்த Aleth Duell என்ற 69 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி Aleth தன்னை ஆண் போல காட்டி கொண்டு டேட்டிங் வலைதளங்களில் பெண்களிடம் நட்பாகியுள்ளார்.
பின்னர் குறித்த பெண்களிடம் நெருங்கி நட்பு உருவாகி காதல் என்ற நிலையை அடைந்தவுடன் அவர்களிடம் பணம் கொடுக்குமாறும் அதை தான் திருப்பி தந்துவிடுவேன் எனவும் கேட்டிருக்கிறார்.
இப்படி பல பெண்களை ஏமாற்றி ஓன்லைன் மூலம் பணத்தை பெற்றுள்ளார். இதோடு எனக்கு தனியாக வங்கி கணக்கை தொடங்கி அதை கொடுக்குமாறும், அதில் நீங்கள் கொடுத்த பணத்தை திரும்பி செலுத்துவேன் எனவும் கூறி ஏமாற்றியுள்ளார்.
Aleth ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பிரிட்டீஷ் கொலம்பியா, ஒன்றாறோவில் நிறைய பேர் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
இது தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.