கனடாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்த ஜப்பானிய பெண்! வரலாறு படைத்ததாக வாழ்த்திய பிரதமர் ட்ரூடோ
பாரீஸ் ஒலிம்பிக்கில் 28 வயது இளம்பெண் கனடாவிற்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஜூடோ போட்டியில் கனடா சார்பில் பங்குபெற்ற கிறிஸ்டா டெகுச்சி (28), 57 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இது ஜூடோவில் கனடாவின் முதல் ஒலிம்பிக் பட்டம் ஆகும்.
கிறிஸ்டா டெகுச்சி (Christa Deguchi) ஜப்பானில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை கனேடியர் மற்றும் தாய் ஜப்பானியர் ஆவர். ஜப்பானுக்காக மூத்த சர்வதேசப் போட்டிகளில் கிறிஸ்டா டெகுச்சி சிறந்து விளங்கினார்.
வெற்றி குறித்து பேசிய அவர், ''இப்போது என் இதயம் மிகவும் நிரம்பியுள்ளது. எனக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. எனது திறன்களை மேம்படுத்த எனது வேர்களைப் பயன்படுத்த முடிவு செய்தேன்'' என்றார். இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தங்கம் வென்ற கிறிஸ்டா டெகுச்சிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் தனது பதிவில், ''வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜூடோவில் கனடாவின் முதல் தங்கப் பதக்கத்தை கிறிஸ்டா டெகுச்சி வென்றார். கனடாவிற்கு பெருமை சேர்ந்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |