55 வயதில் கனடா சாக்லேட் நிறுவனத்தில் வேலை! மகிழ்ச்சியில் துள்ளிய நபருக்கு தெரியவந்த உண்மை... எச்சரிக்கை செய்தி
55 வயதில் கனடாவில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை கிடைக்க போகிறது என நம்பி கனவு கண்ட நபர் பெரியளவில் மோசடி செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்திnன ராசிபுரத்தை சேர்ந்தவர் ஜீவராஜ் (55). இவர் சமீபத்தில் பொலிசில் ஒரு புகார் அளித்தார். அதில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக இணையதளத்தில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
இதில் இருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது திருப்பூரைச் சோ்ந்த கண்ணன் (55) என்பவா் பேசினாா். கனடாவில் சொக்லெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், அந்தப் பணியைப் பெற்றுத்தர ரூ.10 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்தாா்.
இதை உண்மை என்று நம்பிய ஜீவராஜ், 55 வயதில் கனடாவில் வேலை கிடைக்க போகிறதே என மகிழ்ச்சியடைந்தார்.
பின்னர் ரொக்கமாகவும், வங்கிப் பரிவா்த்தனை மூலமாகவும் கண்ணனுக்கு ரூ.3.90 லட்சம் கொடுத்தார் ஆனால், அவா் கூறியபடி வேலை வாங்கிக் கொடுக்காமலும், எனது பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்திருக்கிறார், அப்போது தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என அவர் உணர்ந்தார்.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.. இது தொடா்பாக தனிப்படையினா் நடத்திய விசாரணையில், கண்ணன் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் ரூ.66 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பூரை அடுத்த நல்லூா் பகுதியில் காரில் சென்ற கண்ணனைத் தனிப்படையினா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கண்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கும் நிலையில் வெளிநாட்டு வேலை தொடர்பில் மேலும் பல மோசடிகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.