கனடாவில் நிலையான முகவரி இல்லாத இளைஞர் கைது! வெளிவந்த அவர் செய்த மோசமான குற்றம்
கனடாவில் நிலையான முகவரி இல்லாத இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் செய்த குற்றத்திற்கான பின்னணி வெளியாகியுள்ளது.
ஜாமோர் வால்கர் வைட் என்ற 29 வயது இளைஞரை கைது செய்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளார்.
கடந்த 5ஆம் திகதி யாஞ்ச் மற்றும் மெர்டன் தெருவில் இருந்த பெண்ணிடம் அத்து மீறியிருக்கிறார் வைட். இது தொடர்பான புகாரில் பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வைட்டை கைது செய்துள்ளனர்.
TPS/Handout
பொலிசார் கூறுகையில், வைட்டுக்கு நிலையான முகவரி கிடையாது. அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் கண்காணிப்பை மீறிய வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும் பலர் வைட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
வைட் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரியவந்துள்ளது.