இந்தியாவுக்கு அடுத்தபடியாக மற்றொரு நாட்டின்மீது குற்றம் சாட்டும் கனடா
இந்தியா தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிவந்த கனடா, தற்போது மற்றொரு நாட்டின்மீதும் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது.
பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
கனடாவின் உளவுத்துறை ஏஜன்சி, கனடாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தானும் தலையிட்டிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
கனடா தேர்தல் மற்றும் ஜனநாயக அமைப்பில் வெளிநாட்டவர்கள் தலையீடு என்பது தொடர்பாக கனேடிய பாதுகாப்பு உளவுத்துறை ஏஜன்சி மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
REUTERS
அந்த ஆவணத்தில், கனடாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட்டிருக்கக்கூடும் என்பது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கனடாவில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகள், பாகிஸ்தானுடைய நலன் தொடர்பிலான நடவடிக்கைகளை கனடாவில் அதிகரிக்கும் நோக்கில், பாகிஸ்தான் வம்சாவளியினரான கனேடிய அரசியல்வாதிகள் மீது முறைகேடான வகையில் தாக்கம் செலுத்த முயற்சி செய்திருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |