அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன்
கனடாவின் இரும்பு மனிதன் (Man of Steel) என அழைக்கப்படும் பில்லியனர் பாரி சேக்ல்மேன் (Barry Zekelman), கனடா பிரதமர் மார்க் கார்னி அமெரிக்கா பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை (US-style protectionism) கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சேக்ல்மேன் கூறியதாவது, “அமெரிக்கா 50 சதவீதம் எஃகு இறக்குமதி வரி விதித்ததால், கனடாவின் 15 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள எஃகு துறை சிதைவடைந்துள்ளது.
90 சதவீத ஏற்றுமதி அமெரிக்காவுக்கு செல்லும் நிலையில், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளன” என்று கூறியுள்ளார்.
Algoma Steel நிறுவனம் சமீபத்தில் 1,000 பணியாளர்களை நீக்கியது. ஏற்கனவே 40 சதவீதம் ஏற்றுமதி குறைந்துள்ளதாக Statistics Canada தெரிவித்துள்ளது.
இதனால், கனடா அரசு “Buy Canadian” என்ற பிரச்சாரத்தை தொடங்கி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சிக்கிறது.

ஆனால், “கனடா சீனா, ஜப்பான், துருக்கி, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு திறந்த பின்வாசலாக உள்ளது. அமெரிக்கா தனது காலால் கனடாவின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. இதை நிறுத்த, கனடா அனைத்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கிழித்து, தன் துறையை பாதுகாக்க வேண்டும்” என சேக்ல்மேன் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கனடா தொழில் அமைச்சர் மெலானி ஜோலி, “சேக்ல்மேன், பாதுகாப்பு கொள்கைகளை வலியுறுத்துவதற்குப் பதிலாக, ஒட்டாவா மற்றும் வெள்ளை மாளிகை இடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
சேக்ல்மேன், வட அமெரிக்காவின் மிகப்பெரிய எஃகு குழாய் உற்பத்தியாளராக, 4 பில்லியன் டொலர் விற்பனை வலுவுடன் செயல்படுகிறார். அவர், “உலகம் மாறிவிட்டது. அமெரிக்கா விரைவில் ஐரோப்பாவுக்கு எஃகு ஏற்றுமதி செய்யும்” எனக் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada man of steel Barry Zekelman, US‑style protectionism Canada steel, Mark Carney steel industry policy, Trump steel tariffs impact Canada, Canada steel exports crisis 2026, Canadian steel jobs at risk, Barry Zekelman calls for protectionism, Canada vs US steel trade war, Buy Canadian steel campaign, Canada steel industry news