தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த கனடாவின் அடுத்தகட்ட நடவடிக்கை! மூன்றாவது கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம்
அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த கனடா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
கனடாவின் சுகாதாரத் துறையான Health Canada கடந்த டிசம்பர் மாதம் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா உருவாக்கிய 2 கொரோனா தடுப்பூசிகளை அங்கீகரித்தது.
ஆனால், நவம்பரில் வெளியிடப்பட்ட சோதனை தரவுகளின் அடிப்படையில் அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதில் Health Canada தாமதம் காட்டியது.
இந்நிலையில் தற்போது, நாட்டின் அனைத்து பெரியவர்களுக்கும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வின் முடியில் அறியப்பட்டப்பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கிய கோவிட்-19 தடுப்பூசியை நாட்டின் 3-வது அவசரகால தடுப்பூசியாக பயன்படுத்த்த அங்கீகாரம் அளித்துள்ளது.
இதமூலம், நாட்டில் தடுப்பூசி திட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்த கனடா முடிவெடுத்துள்ளது.
மேலும், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 62.1 சதவீதம் செயல்திறன் கொண்டதாகவும், மொத்தத்தில் அதை பயன்படுத்துவதன் முலம் முக்கியமான பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகாவிடமிருந்து 20 மில்லியன் டோஸ் தடுப்பூசியை கனடா ஆர்டர் செய்துள்ளது.
கனடா மேலும் Covax-லிருந்து 1.9 மில்லியன் டோஸைப் பெற உள்ளதாக Health Canada கூறியுள்ளது.