தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள்... பிரதமர் ட்ரூடோ நிலை பரிதாபம்
கனடாவில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கருத்துக் கணிப்பில் பின்தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆத்திரத்தில், திங்களன்று தனது முக்கிய போட்டியாளரை ட்ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார். கனடாவில் செப்டம்பர் 20ம் திகதி பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்பட உள்ளது.
பிரதமர் ட்ரூடோ உட்பட முக்கிய தலைவர்கள் சுறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கனடாவில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டுவருவோம் என கன்சர்வேட்டிவ் கட்சியின் Erin O'Toole கனேடிய மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
ஆனால் அதை கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் ட்ரூடோ, மக்களை குழப்ப அவர்கள் எது வேண்டுமானாலும் கூறி உறுதி அளிக்கலாம் என்றார்.
இதனிடையே, ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் 34.9% வெற்றி வாய்ப்புடனும் லிபரல் கட்சியினர் 33.4% வெற்றி வாய்ப்புடனும் புதிய ஜனநாயகக் கட்சி 18.9% வெற்றி வாய்ப்புகளுடனும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.