கனேடிய பெண்ணை ஒரே நாளில் கோடீஸ்வரி ஆக்கிய லொட்டரிச் சீட்டு
கனேடிய பெண்ணொருவர் வாங்கிய லொட்டரிச்சீட்டொன்று அவரை ஒரே நாளில் கோடீஸ்வரியாக்கியுள்ளது.
ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டீனா (Deana McClelland), பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு லொட்டரிச்சீட்டை வாங்கியுள்ளார்.
அந்த லொட்டரிச்சீட்டுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது. ஒரு மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 21,69,11,198.00 ரூபாய் ஆகும்.
உங்களுக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது என டீனாவுக்கு மொபைலில் செய்திவந்தபோது அவர் அதை நம்பவேயில்லையாம். தனது மொபைலை ரீஸ்டார்ட் செய்து மீண்டும் அந்த செய்தியை உறுதி செய்துகொண்டாராம் அவர்.
டீனாவிடம், கோடீஸ்வரி ஆகிவிட்டீர்களே எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டால், லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது என்னும் செய்தியைக் கேட்டு தலை சுற்றல் வந்துவிட்டதாகவும், அதிலிருந்து தான் இன்னமும் விடுபடவில்லை என்றும் சிரித்துக்கொண்டே கூறுகிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |