ஒரு கனேடியரும் இந்திய வம்சாவளியினரும் இணைந்து விண்வெளிக்குப் பயணம்: சில சுவாரஸ்ய தகவல்கள்
போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து விண்வெளிக்கு பயணிகளை அனுப்பும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அவற்றின் கடைசி சோதனையாக, இரண்டு விண்வெளி வீரர்கள், Starliner என்னும் விண்கலத்தில் ஏறிச் சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வார காலம் தங்க இருக்கிறார்கள்.
யார் அவர்கள்?
அவர்கள், நாசாவின் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் Butch Wilmore என்னும் இருவர் ஆவர். சுனிதா விண்கலத்தின் பைலட் ஆகவும், Butch Wilmore திட்டத்தின் கமாண்டர் ஆகவும் செயல்பட இருக்கிறார்கள்.
இந்த ராக்கெட்டை, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, திங்கட்கிழமை, அதாவது, மே மாதம் 6ம் திகதி, இரவு 10:34 மணிக்கு, ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.
சுனிதா குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்
இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே 2 முறை சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு செய்த அனுபவம் கொண்டவர்.
அதிக முறை விண்வெளியில் நடந்த பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சுனிதா, 321 நாட்கள் விண்வெளியில் செலவிட்டுள்ளார்.
சுனிதாவின் உண்மையான பெயர் Sunita Lyn Pandya என்பதாகும். 58 வயதாகும் சுனிதாவின் தந்தையான Deepak Pandya குஜராத்தை பின்னணியாகக் கொண்டவர். தாய் ஸ்லோவேனியா நாட்டு பின்னணி கொண்டவர்.
மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்லும் சுனிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |