காதலியுடன் விடுமுறையில் சுற்றுலா சென்ற கனேடியருக்கு நேர்ந்த துயரம்
கனடாவைச் சேர்ந்த வங்கியாளர் ஒருவர் தனது காதலியுடன் விடுமுறையில் இருந்தபோது, பிரபல கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனேடிய வங்கியாளர்
கியூபெக்கைச் சேர்ந்தவர் விக்டர் மாசன். வங்கியாளராக பணியாற்றி வந்த இவர், மெக்ஸிகோவிற்கு தனது காதலி எல்வா காஸ்டிலோவுடன் விடுமுறையில் சென்றுள்ளார்.
கடற்கரை ரிசார்ட் ஒன்றில் தங்கிய அவர், கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
சடலமாக கண்டுபிடிப்பு
இதனையடுத்து பாரில் இருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள கார் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் மாசன் கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் பொலிஸார் கூறுகையில், காதலியுடன் வந்த வங்கியாளர் பிரபல கடற்கரை ரிசார்ட்டில் தனது பார் டேப்பில் தகராறில் ஈடுபட்டதால் சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகள் அவரது Walletஐ திருடிச் சென்றாகவும், ஆனால் அவரது தொலைபேசி மற்றும் பாஸ்போர்ட்டை விட்டுச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது.