கனேடிய கோடீஸ்வர தம்பதி மர்ம மரணம்: குற்றவாளி பற்றிய தகவலுக்கு பல மில்லியன் சன்மானம்
கனேடிய கோடீஸ்வர தம்பதியின் மரணத்தில் ஐந்து ஆண்டுகள் ஆகியும் மர்மம் விலகாத நிலையில், குற்றவாளிகளை பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு மிகப்பெரிய பரிசு தொகையை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
கனேடிய கோடீஸ்வர தம்பதியின் மர்ம மரணம்
கனடாவில் மிகப்பெரிய கோடீஸ்வர தம்பதியான பேரி ஷெர்மன்(75) மற்றும் ஹனி(70) இருவரும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி கயிற்றால் கட்டிப் போட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
முதலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்து இருந்த நிலையில், பிறகு வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், பேரி மற்றும் ஹனி ஆகியோர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
Barry Sherman & Honey- பேரி ஷெர்மன் & ஹனி
இதற்கிடையில் மிகப்பெரிய கோடீஸ்வரரான பேரி மற்றும் ஹனி ஆகிய இருவரின் மர்ம மரணம் அப்பகுதி முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது, மேலும் அவர்களின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்த சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்து கொண்டிருந்தார்.
அத்துடன் அவர்கள் இருவரும் உயிரிழந்து தற்போது 5 ஆண்டுகள் ஆகியும், அவர்கள் இறந்தது எப்படி? அவர்களை கொலை செய்த குற்றவாளி யார்? என்பது பற்றிய தகவல் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.
Family Handout
பேரி-ஹனி குடும்பத்தினரின் பொது அறிவிப்பு
இந்நிலையில் சமீபத்தில் பேரி-ஹனி தம்பதியினரின் ஐந்தாவது ஆண்டு நினைவு அஞ்சலியை கொண்டாடிய அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் பேரி மற்றும் ஹனி ஆகியோரின் மரணத்திற்கு காரணம் யார் என்பது குறித்து தகவல் அளித்தால் 35 மில்லயன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 280 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும் என்றும் பேரி ஷெர்மனின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
REUTERS / Alamy Stock Photo
தம்பதியினர் இறப்பதற்கு முன்பாக அப்பகுதியில் சுற்றி திரிந்த நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்தாலும், அதில் அவர்கள் யார் என்பது குறித்த அடையாளங்கள் கண்டு கொள்ள முடியவில்லை, அதனால் பேரி மற்றும் ஹனி-யின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீளாத் துயரில் இருந்து வருகின்றனர்.
அத்துடன் அவர்கள் அதற்கான காரணத்தை கண்டறிய தனியாக துப்பறியும் அதிகாரிகளை நியமித்து விசாரித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
CTV Network