உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து மரணமடைந்த கனேடிய கோடீஸ்வரர்
கனேடிய கோடீஸ்வரரும், கரீபியன் பிரீமியர் லீக்கின் நிறுவனருமான அஜ்மல் ஹசன் கான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது
ஐக்கிய அரபு அமீரகத்தின் Palm Jumeirah-வில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹொட்டல் ரிசார்ட்டில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது அவர் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவமானது திங்களன்று நடந்துள்ளது. 60 வயதான அஜ்மல் ஹசன் கான் அப்போது தனியாக தங்கியிருந்தார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. உடற்பயிற்சி முடித்து வெளியே வந்தவர், ஹொட்டல் ஊழியர்களிடம் மருத்துவ உதவி நாடிய நிலையில், திடீரென்று சுருண்டு விழுந்துள்ளார் என்றே அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அவரது உடலை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு, உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அஜ்மல் ஹசனின் தாயார் இந்தியாவின் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற பர்லிங்டன் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார்
அஜ்மல் ஹசனின் திடீர் மறைவு அவரது குடும்பத்தையும், சமூக மக்களையும் மொத்தமாக உலுக்கியுள்ளது. மூன்று சகோதரர்களில் மூத்தவரான அஜ்மல் ஹசன் Verus குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவராவார்.
கரீபியன் தீவுகளில் ஆண்டுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை உருவாக்கவும் நடத்தவும் செய்த பின்னரே, அதிகமாக கவனம் பெற்றார்.
இந்திய வம்சாவளி பெற்றோருக்கு நைஜீரியாவில் பிறந்தவர் அஜ்மல் ஹசன். கனடாவில் குடியேறும் முன்னர் அவர் பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார். அவரது இறுதிச்சடங்குகள் சனிக்கிழமை 1.40 மணியளவில் கனடாவின் Mississauga பகுதியில் முன்னெடுக்கப்பட இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |