கனடா எல்லையில் இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்போவதில்லை: பொலிசார் கூறும் காரணம்...
கனடா எல்லையில் இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்போவதில்லை என இந்திய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
என்ன காரணம்?
30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) ஆகியோர் உட்பட எட்டு பேர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்டார்கள்.
இந்நிலையில், கனடா எல்லையில் இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்போவதில்லை என இந்திய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
BBC GUJARATI
கனடா பொலிசார் இதுவரை இந்த விடயம் தொடர்பாக தங்களை அணுகவில்லை என்றும், அவர்கள் தங்களை அணுகும் வரை அல்லது, கனடா விசாரணையில் ஏதாவது முக்கிய விடயம் தெரியவருவதுவரை, தாங்கள் அந்த விடயம் குறித்து விசாரிக்கப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்த குடும்பத்தினர் கனடா செல்லும்போது, முறைப்படி விசா வைத்திருந்திருக்கிறார்கள், பாஸ்போர்ட் வைத்திருந்திருக்கிறார்கள், ஆகவே, அது குறித்து விசாரிப்பதற்கான தேவை எதுவும் இப்போது இல்லை என உள்ளூர் பொலிஸ் அதிகாரியான Dinesh Sinh Chauhan தெரிவித்துள்ளார்.
REUTERS
எதற்காக அமெரிக்கா சென்றது அந்தக் குடும்பம்?
இதற்கிடையில், இந்தியாவில் பிரவீன் சௌத்ரியின் கிராமமே சோகமே உருவாக காணப்படுகிறது.
அவர்கள் கனடா போவதாகத்தான் கூறிச் சென்றார்கள் என்று கூறும் பிரவீனுடைய உறவினரான Jasubhai Chaudhary, அவர்கள் அமெரிக்கா செல்லத் திட்டம் வைத்திருந்ததாக தெரியவில்லை என்கிறார்.
அவர்கள் எதற்காக அமெரிக்கா நோக்கி பயணித்தார்கள் என்பது தனக்கோ, பிரவீனுடைய மற்ற உறவினர்களுக்கோ தெரியவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.
வீடியோவை காண
PAVAN JAISHWAL