புலம்பெயர்வோரால் ஒரு நாட்டுக்கு நன்மையே என்பதை கண்டுபிடித்த கனேடியருக்கு நோபல் பரிசு
புலம்பெயர்வோரை சுமையாகவே உலக நாடுகள் பல பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து வருவோரால் அந்நாட்டில் பிறந்தவர்களுக்கு எதிர்மறையான பாதிப்பு இல்லை, மாறாக நன்மையே ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து கண்டுபிடித்த கனேடியர் ஒருவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, கனடாவின் ஒன்ராறியோவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் David Card, Joshua D. Angrist என்னும் இஸ்ரேல் அமெரிக்கர், Guido W. Imbens என்னும் நெதர்லாந்து அமெரிக்கர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதில், David Cardக்கு மட்டும் பரிசுத்தொகையில் பாதி வழங்கப்பட்டுள்ளது.
David, குறைந்தபட்ச ஊதியம், புலம்பெயர்தல் மற்றும் கல்வி ஆகியவை தொழிலாளர் சந்தையை எவ்விதம் பாதிக்கின்றன என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டிருந்தார்.
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 11, 2021
The 2021 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel has been awarded with one half to David Card and the other half jointly to Joshua D. Angrist and Guido W. Imbens.#NobelPrize pic.twitter.com/nkMjWai4Gn
இதுவரை, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதும், புலம்பெயர்தலும் ஒரு நாட்டை எதிர்மறையாக பாதிக்கும் என்றே பொருளாதார வல்லுநர்கள் முதல் பலர் என்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால், Davidஇன் ஆய்வு, அந்த எண்ணத்தையே முற்றிலும் மாற்றியுள்ளது. அவர், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல் வேலைக்கமர்த்தப்படும் தொழிலார்களின் எண்ணிக்கையை குறைக்காது என்றும், ஒரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து வருவோரால், அந்நாட்டில் பிறந்த குடிமக்களின் ஊதியம் பாதிக்கப்படாது என்றும் கண்டறிந்துள்ளார்.
அவருடன் நோபல் பரிசை பகிர்ந்துகொள்ளும் மற்றவர்களும், இதுபோன்ற சமூக பிரச்சினை குறித்தே ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள்.
உதாரணமாக, அமெரிக்க உணவகம் ஒன்றில் பணியாற்றிய ஊழியர்களின் ஊதியம் 4.25 அமெரிக்க டொலர்களிலிருந்து 5.05 டொலர்களாக உயர்த்தப்பட்டபோது, இதற்கு முந்தைய ஆய்வுகள் கூறியதற்கு மாறாக, ஊதிய உயர்வால் பணியாளர்களின் என்ணிக்கை பாதிக்கப்படவில்லை, அதாவது குறையவில்லை என்பதை Davidம் அவரது சக ஆய்வாளரான Alan Kruegerம் கண்டுபிடித்தார்கள். (Alan Krueger ஏற்கனவே இறந்துபோய்விட்டார்).
எதனால் ஊதிய உயர்வால் பணியாளர்களின் என்ணிக்கை பாதிக்கப்படவில்லை என்ற அடுத்த ஆய்வில் அவர்கள் இறங்கியபோது, சில விடயங்கள் தெரியவந்தது. அதாவது, பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்திய முதலாளிகள் தாங்கள் விற்கும் பொருட்களின் விலையை உயர்த்தினார்கள். அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என தெரியவந்ததால் மேலும் புதிதாக ஆட்கள் வேலைக்கு வந்தார்களேயொழிய, பணியாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதை Davidன் ஆய்வு கண்டறிந்தது.
Good morning to 2021 economic sciences laureate David Card!
— The Nobel Prize (@NobelPrize) October 11, 2021
Card’s wife Cynthia Gessele snapped this photo of him speaking to #NobelPrize’s Adam Smith (which he suspected might be a made-up name) right after he had heard the news.
Listen to our interview, coming soon. pic.twitter.com/I93bJwikGl
அதுபோல, ஒரு நாட்டுக்குள் அகதிகள் வந்தால் அவர்களால் ஏற்கனவே அந்நாட்டின் குடிமக்களாக இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற எதிர்மறையான எண்ணம் இருந்துவந்தது. ஆனால், புதிதாக புலம்பெயர்ந்து வருவோரால் நாட்டுக்கு நன்மைதான் என்றும், சொல்லப்போனால், முன்பு புலம்பெயர்ந்து வந்தவர்களுக்குதான் பாதிப்பு என்றும் அவர் கண்டறிந்தார்.
உதாரணமாக, 1980ஆம் ஆண்டு, கியூபாவிலிருந்து 125,000 பேர் மியாமிக்கு திடீரென புலம்பெயர்ந்து வந்தார்கள். அதனால், மியாமிக்கு வேலைக்கு ஆள் கிடைத்ததேயொழிய, யாருக்கும் எவ்வித எதிர்மறையான பாதிப்பும் ஏற்படவில்லை.
தொடர்ந்து David மேற்கொண்ட ஆய்வுகள், குறைவான கல்வித்தகுதி கொண்டிருந்தாலும் மியாமி மக்களின் ஊதியத்திற்கு புலம்பெயர்ந்தோரால் நன்மைதான் ஏற்பட்டுள்ளது என்பதைத் தெள்ளத்தெளிவாக காட்டின.
ஆனால், Davidன் ஆய்வுகளை பல பொருளாதார நிபுணர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த முடிவுகள் சாத்தியமல்ல என்றே அவர்கள் அப்போது கருதினார்கள்.
ஆனால், இந்த ஆய்வுக்கு நோபல் பரிசு கிடைத்ததிலிருந்து தங்கள் எண்ணம் தவறானது என்பதை அவர்களும் நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.