கனடாவில் முதல்முறையாக பழங்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்ட கத்தோலிக்க தேவாலயம்!
கனடாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்று அங்குள்ள பழங்குடி சமூக மக்களிடம் முதல் முறையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 1,000 ஆண்டுகளில் உறைவிடப் பள்ளிகளில் பழங்குடி குழந்தைகளுக்கு நேர்ந்ததாகச் சொல்லப்படும் துன்புறுத்தலுக்காக தேவாலயம் மன்னிப்புக் கோரியது.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட ஒரு பக்க அறிக்கையில், பழங்குடி மாணவர்கள் அனுபவித்த துன்பங்களைத் தங்களால் உணர முடிவதாகக் கத்தோலிக்கப் பாதிரியார்கள் கூறினர்.
1831-ஆம் ஆண்டு முதல் கடந்த 1996 வரை வலுக்கட்டாயமாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளின் கல்லறைகள் அண்மையில் அடையாளம் காணப்பட்டன.
பழங்குடிக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150,000 பிள்ளைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை, இயல்பு வாழ்க்கைக்குப் பழக்க அவ்வாறு செய்யப்பட்டது.
ஆனால், தலைமை ஆசியர்களும், ஆசிரியர்களும் பழங்குடி மாணவர்களைப் பாலியல், உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது.
கனடாவில் வரும் 30-ஆம் திகதி, உண்மை, நல்லிணக்கத்துக்கான முதல் தேசிய தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், கத்தோலிக்க தேவாலயம் பழங்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
வரும் டிசம்பரில் பழங்குடிக் குழுவினர், வத்திக்கான் (Vatican) சென்று போப்பைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.