கனடாவில் நிகழ்ந்த கோர விபத்து: இந்திய வம்சாவளி ஓட்டுநருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
Canadian Court Sentenced Indian Origin Truck Driver to 6 Years: விபத்து ஏற்படுத்திய இந்திய வம்சாவளி லொறி ஓட்டுநருக்கு கனடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்தில் இருவர் பலி
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 19ம் திகதி மாண்ட்ரீல் நகருக்கு அருகில் நெடுஞ்சாலை பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்ஜீத் சிங் என்ற கனரக லொறி ஓட்டுநர் செல்போனில் விளையாடிக் கொண்டே லொறியை கவனக்குறைவாக இயக்கி வந்துள்ளார்.
இந்த கவனக்குறைவு காரணமாக 7 வாகனங்கள் மோதிக்கொண்டு சாலையில் பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் 42 வயது நான்சி லெபிரான்கோயிஸ் மற்றும் அவரது 11 வயது மகன் லோயிக் செவாலியர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்தனர்.
நீதிமன்ற தீர்ப்பும், தண்டனையும்

இந்நிலையில் தன்னுடைய குற்றத்தை கடந்த ஏப்ரல் மாதம் பல்ஜீத் சிங் ஒப்புக் கொண்டதையடுத்து, கியூபெக் நீதிமன்ற நீதிபதி சாச்சாப் பிளைஸ், குற்றம் சுமத்தப்பட்ட 30 வயது பல்ஜீத் சிங்கிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அத்துடன் அவர் 10 ஆண்டுகளுக்கு பல்ஜீத் சிங் வாகனம் ஓட்டவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கனரக வாகனங்களை ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவது எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நீதிபதி சாச்சாப் பிளைஸ் சுட்டிக்காட்டியதோடு, ஓட்டுநர் பல்ஜீத் சிங்கின் பொறுப்பற்ற செயலையும் கடுமையாக கண்டித்தார்.