அமெரிக்காவில் மாயமான கனேடிய சிறுமி உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பம்
ஒரு கனேடிய சிறுமி அமெரிக்காவின் நியூயார்க்கில் மாயமான நிலையில், அவள் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அந்த வழக்கில் இப்போது புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
மாயமான கனேடிய சிறுமி
சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில், நியூயார்க்கிலுள்ள Lake George என்னுமிடத்தில் வாழும் கனேடியரான லூசியானோ (Luciano Frattolin, 45), தனது மகளான மெலினா (Melina Frattolin, 9)ஐக் காணவில்லை என பொலிசாரிடம் புகாரளித்தார்.
அவள் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், Ticonderoga என்னுமிடத்தில், மெலினாவின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கில் புதிய திருப்பம்
அந்த வழக்கில் இப்போது புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆம், மகளைக் காணவில்லை என புகாரளித்த லூசியானோவையே தற்போது பொலிசார் கைது செய்துள்ளனர்.
தன் மகள் கடத்தப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த லூசியானோ, விசாரணையின்போது மாற்றி மாற்றி பேசியுள்ளார்.
கடத்தப்பட்ட நேரம் முதலான விடயங்கள் குறித்து அவர் கூறிய விடயங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்படவே, அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |