நான் மனிதரா? இல்லை நீங்கள் நாய்! கனடாவில் தவறான DNA பரிசோதனை
கனடாவில் டிஎன்ஏ நிறுவனம் பெண்ணை நாயாக அடையாளம் கண்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DNA பரிசோதனை
கனடாவைச் சேர்ந்த செல்லப்பிராணிகளின் டிஎன்ஏ பரிசோதனை நிறுவனம், மனிதரை நாயாக தவறுதலாக அடையாளம் கண்டு இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
டொரண்டோவை தலைமையிடமாகக் கொண்ட "DNA My Dog" என்ற நிறுவனத்திடம் செல்லப்பிராணிகளுக்கான டிஎன்ஏ சோதனை சேவையை ஆராய்ச்சி செய்ய WBZ குழு மனித மாதிரியை அனுப்பியுள்ளனர்.
இந்த சோதனையின் முடிவில் வழங்கப்பட்ட பெண்ணின் DNA மனித மாதிரி அலாஸ்கன் மலமூட் (Alaskan Malamute, 40%), ஷார்-பீ (Shar-Pei, 35%), மற்றும் லாப்ரடார் (Labrador, 25%) அகிய நாய்களின் DNA கலவையாக இருப்பதாக DNA நிறுவனம் அதிர்ச்சி தரும் முடிவை வெளியிட்டுள்ளது.
WBZ குழு அதே நேரத்தில் அதே மனித மாதிரியை அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்காவை சேர்ந்த Orivet மற்றும் Wisdom Panel என்ற நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்தது.
ஆனால் இந்த நிறுவனங்கள், இன அடையாள பகுப்பாய்வு செய்வதற்கான போதுமான தரவுகளை வழங்கப்பட்ட மாதிரிகள் வழங்கவில்லை எனவும், எனவே மாதிரிகள் தோல்வியடைந்தன என்றும் தெரிவித்துள்ளது.
இது முதல்முறை அல்ல
DNA My Dog நிறுவனம் இது போன்ற தவறை செய்யும் முதல் சம்பவம் இல்லை. இதற்கு முன்னதாகவும் WBZ குழு அனுப்பிய பெண்ணின் மாதிரியை புல்டாக்(bulldog) இனத்தின் ஒரு பகுதி என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ண்டும் மீண்டும் தவறான அடையாளம் காணப்படுவது நிறுவனத்தின் நெறிமுறைகளின் மீதான சந்தேகத்தையும், அவர்களின் செல்லப்பிராணி டிஎன்ஏ பரிசோதனையின் துல்லியத்தின் மீதான கவலையையும் எழுப்பியுள்ளது.
Canada DNA company identifies woman as dog,
DNA pet test mistake Canada,
DNA My Dog inaccurate results,
Funny DNA test results dog,
Human DNA in dog test,
Pet DNA testing accuracy,
DNA test mix-up,
Canadian pet DNA companies,