விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கனேடிய மருத்துவர்: தாய் செய்த நெகிழவைக்கும் செயல்
விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, கனேடிய மருத்துவர் ஒருவர் அவருக்கு விமானத்திலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
ரொரன்றோ பல்கலையில் பேராசிரியராக பணியாற்றும் Dr. ஆயிஷா காதிப் (Dr Aisha Khatib), உகாண்டாவிலுள்ள Entebbe என்ற இடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
விமானம் தரையிறங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்போது, திடீரென விமானத்தில் மருத்துவர்கள் யாராவது உள்ளார்களா என விமானப் பணிப்பெண்கள் கேட்க, ஆயிஷா எழுந்து என்ன விடயம் என பார்க்கச் சென்றிருக்கிறார்.
பார்த்தால், அங்கே ஒரு பெண் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பிரசவம் ஆகத் தொடங்கிவிட்டது. உடனடியாக விமானத்திலிருந்த செவிலியர் ஒருவரும், குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரும் ஆயிஷாவுக்கு உதவிக்கு வர, நடு வானில், நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார் அந்தப் பெண்.
ஆயிஷாவின் உதவியால் நெகிழ்ந்து போன அந்தப் பெண், அற்புதமாக நடுவானில் பிறந்த தன் குழந்தைக்கு மிரக்கிள் ஆயிஷா (Miracle Aisha) என்று பெயரிட்டிருக்கிறார்.
தன் பெயரை குழந்தைக்கு சூட்டியதால் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்த Dr. ஆயிஷா, தான் கழுத்தில் அணிந்திருந்த தன் பெயர் பொறிக்கப்பட்ட நெக்லஸை கழற்றி குழந்தையின் கழுத்தில் அணிவிக்க, மற்ற பயணிகள் கரவொலி எழுப்ப, அப்போதுதான் தான் ஒரு விமானத்தில் பயணிப்பதையும் தனது செயலை மற்றவர்கள் கவனித்துக்கொண்டிருப்பதையும் உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Dr. ஆயிஷா.
Is there a doctor on the plane? ??♀️??⚕️Never thought I’d be delivering a baby on a flight! ✈️ @qatarairways Thanks to the airline crew who helped support the birth of this Miracle in the air! Mom and baby are doing well and healthy! #travelmedicine pic.twitter.com/4JuQWfsIDE
— Aisha Khatib, MD (@AishaKhatib) January 13, 2022