வெளிநாடொன்றில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கனேடியர்
மெக்சிகோ நகரம் ஒன்றில், கனேடியர் ஒருவர் கார் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த சில நாட்களில் குறிப்பிட்ட இடத்தில் சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்படுவது குறித்த இரண்டாவது செய்தியாகும் இது.
யார் அந்த நபர்?
திங்கட்கிழமையன்று, மெக்சிகோவிலுள்ள Puerto Escondido என்னும் நகரில், கனேடியர் ஒருவர் கார் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த காயம் ஒன்று இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவரது பெயர் Victor Masson (27) என்பது மட்டும் தெரியவந்துள்ளது. அவர் கனடாவில் எந்த நகரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
அவர் எதனால் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்பது குறித்தும் பொலிசார் எதுவும் தெரிவிக்கவில்லை.
இரண்டாவது நபர்
மெக்சிகோவின் Oaxaca மாகாணத்தில், கடந்த சில நாட்களுக்குள் கொல்லப்பட்ட இரண்டாவது வெளிநாட்டு சுற்றுலாப்பயணியாவார் Victor.
கடந்த வெள்ளிக்கிழமை அர்ஜெண்டினா நாட்டவரான Benjamin Gamond என்னும் சுற்றுலாப்பயணி Puerto Escondido நகருக்கு மேற்கே அமைந்துள்ள ஒரு இடத்தில் தாக்கப்பட்டார். அவரும், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்துவிட்டார்.